Kodaikanal | Protest | சுற்றுலா வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகைப் போராட்டம் - கொடைக்கானலில் பரபரப்பு

Kodaikanal | Protest | சுற்றுலா வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகைப் போராட்டம் - கொடைக்கானலில் பரபரப்பு

Kodaikana | Protest | சுற்றுலா வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகைப் போராட்டம் - கொடைக்கானலில் பரபரப்பு கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியை அகற்றக் கோரி, சுற்றுலா வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல, ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறைக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாகனங்களுடன் சோதனைச் சாவடியைச் சூழ்ந்த ஓட்டிகள், வனத்துறையின் இந்தச் செயலால் சுற்றுலாப் பயணிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

X

Thanthi TV
www.thanthitv.com