Kodaikanal |போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாவட்ட கலெக்டர்..ஒரே சமயத்தில் படையெடுத்ததால் பரபரப்பு

Kodaikanal |போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாவட்ட கலெக்டர்..ஒரே சமயத்தில் படையெடுத்ததால் பரபரப்பு

Kodaikanal |போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாவட்ட கலெக்டர்..ஒரே சமயத்தில் படையெடுத்ததால் பரபரப்பு ஞாயிறு விடுமுறை என்பதால் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஏரியில் படகுசவாரி மேற்கொண்டனர். மேலும் பிரையன்ட் பூங்காவில் புதிதாக பூத்துள்ள ஆயிரக்கணக்கான மலர்களையும் கண்டு ரசித்தனர். கொடைக்கானல் ஏரியை சுற்றி சைக்கிள், குதிரை சவாரியும் செய்தனர். சுற்றுலா வாகனங்கள் படையெடுப்பால் கொடைக்கானலில் வாகன நெரிசல் ஏற்பட்ட‌து. இதனிடையே, கொடைக்கானலில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வாகனம் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

X

Thanthi TV
www.thanthitv.com