கார் ஓட்டுநர் கொலை : நடிகையின் தந்தை கூலிப்படை ஏவியது அம்பலம்

கொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
கார் ஓட்டுநர் கொலை : நடிகையின் தந்தை கூலிப்படை ஏவியது அம்பலம்
Published on
கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபாகரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். செண்பகனூர் வனப்பகுதியில் 20 அடி பள்ளத்தாக்கில் அவரது உடலை மீட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கு, திரைப்பட நடிகை விஷ்ணுப்பிரியா-வுடன் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதை விஷ்ணுப்பிரியாவின் தந்தை கண்டித்தும், அவர்கள் தொடர்ந்ததால், கோபமடைந்த அவர் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரித்து வரும் தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தையை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com