கன்னத்தில் குத்தி மூளை வரை சென்ற கத்தி - ஆபரேஷன் செய்து காப்பாற்றிய டாக்டர்ஸ்.. மெடிக்கல் மிராக்கிள்
சேலம் பகுதியில் குழந்தையின் கன்னத்தில் குத்திய கத்தியை, அரசு மருத்துவர்கள் போராடி அகற்றியுள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது 5 வயது மகன் ரோகித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கன்னத்தில் குத்திய கத்தி, மூளையின் நடுப்பகுதி வரை சென்றிருந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் குழுவாக இயங்கி, உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கியுள்ளனர். பின்னர்அறுவை சிகசிச்சை செய்து குழந்தை தற்போது காப்பற்றப்பட்டுள்ளது.
Next Story
