கிளாம்பாக்கம் பிரச்சனை - முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு | kilambakkam bus stand

கிளாம்பாக்கம் பிரச்சனை - முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு | kilambakkam bus stand
Published on

கிளாம்பாக்கத்திலிருந்து கடந்த 10ஆம் தேதி நள்ளிரவு இயக்கப்பட்ட பேருந்துகள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது...இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டம் சார்பாக 201 பேருந்துகளும் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சேலம் கோட்டம் சார்பாக15 பேருந்துகளும், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய, ஆயிரத்து 124 பேருந்துகளுடன் 612 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com