

உலக அளவிலான (KICK BOXING கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு தருமபுரி பேருந்து நிலையத்தில் ஊர் பொது மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.தருமபுரி மாவட்டம் வெள்ளோலை பகுதியை சார்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி பயின்று வரும் 13 வயது மாணவி புவனேஸ்வரி, தாய்லாந்தில் நடைபெற்ற உலக கிக்பாக்ஸிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில், தருமபுரி திரும்பிய மாணவி புவனேஸ்வரிக்கு கிராம மக்கள் திரளாக கூடி நின்று மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி பள்ளி மாணவியை சால்வை அணிவித்து கவுரவித்தார்.