இணையத்தில் வைரலான நிர்வாண வீடியோ.. நண்பர்களே செய்த காரியம் - கேரளாவில் நடந்த பகீர் சம்பவம் | Kerala
கேரளாவில், பள்ளி வகுப்பறையில் மாணவரின் ஆடைகளை களைந்து சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையம் மாவட்டம் பாளை என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த வீடியோ பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Next Story
