Kerala Boat Race | விமரிசையாக நடைபெற்ற உத்திரட்டாதி படகுப்போட்டி - ஆர்வமுடன் கண்டுகளித்த மக்கள்
கேரளாவில் உள்ள பம்பா நதியில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பரபரப்பான ஆரன்முள உத்திரட்டாதி படகுப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த படகு போட்டியானது உத்திரட்டாதி நட்சத்திரத்தின் போது கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற விழாவின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பம்பா நதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான ஊர்மக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் மற்றும் படகு போட்டி ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இப்போட்டியை கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் திரைப்பட நட்சத்திரம் ஜெயசூர்யா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
Next Story
