"கோடி கணக்கில் மோசடி செய்த கேடி COUPLE"-தேடிச் சென்று தாக்கிய அதிர்ச்சி வீடியோ
குமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் பலரிடம் இருந்தும் கோடி கணக்கில் பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவான குடும்பத்தை தேடி சென்று தாக்குதல் நடத்திய பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடையால் பகுதியை சேர்ந்தவர்கள், செல்வகுமார் - ஜார்லின் தம்பதி... செல்வகுமார் அருமனை பகுதியில் ஹாலோபிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அப்போது, செல்வகுமாரும், அவரது மனைவியும் சேர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களிடம் கோடிக்கணக்கில் பணமும், நகையும் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென செல்வகுமார் நிறுவனத்தை வேறொருவருக்கு விற்று விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஏமாற்றப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், செல்வகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த செல்வகுமாரை, சிலர் தேடி பிடித்து தாக்குவது போன்ற வீடியே வெளியாகி உள்ளது
