கற்பித்தலில் புதிய வழிமுறைகள்... ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்

கரூர் அரசு தொடக்கப் பள்ளி கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கையாண்டு அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வரும்போது எட்டு வகையான வணக்கங்களை கூறி வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளிக்கு வந்தவுடன் தோப்புக்கரணம் போடுவதை மாணவர்கள் உடற்பயிற்சியாக எடுத்துகொண்டு உற்சாகமாக செய்து வருகின்றனர். இது தவிர மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ், கணினி வகுப்புகள், மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் என கூடுதல் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் காலை முதல் மாலை வரை சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் கற்று வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com