Karaikal Death | அப்படியே இடிந்து விழுந்து மூதாட்டி கொடூர பலி - குலைநடுக்க காட்சி

அப்படியே இடிந்து விழுந்து மூதாட்டி கொடூர பலி - குலைநடுக்க காட்சி

காரைக்காலில் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்த‌தில், சாலையில் சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரைக்காலில் உரிய பாதுகாப்பு இன்றி, மதுபான கடையில் கட்டிட புனரமைப்பு பணி நடைபெற்ற‌து. இதில், கட்டடத்தின் சுவர் சாலையில் சென்ற மூதாட்டி மீது இடிந்து விழுந்த‌தில், அவர் பரிதாபமான உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கடை உரிமையாளர் அரவிந்த், ஒப்பந்ததாரர் ராமன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காரைக்கால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com