KanyaKumari | "இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள்.." - குமரி அருகே நடந்தது என்ன..?
குமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பலத்த சூறை காற்று காரணமாக ஆறுகாணி சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுரம் சோலார் மின்விளக்குகள் சேதமடைந்த நிலையில் தற்போது வரை அதனை சீரமைக்கமால் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கும் மலையோர கிராமங்கள் விரைந்து சீரமைக்க கோரிக்கை.
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறை காற்று காரணமாக ஆறுகாணி சுற்றுவட்டார பகுதிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியால் அமைக்கப்பட்ட உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் சேதமடைந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பயன்பாடற்று கிராமப்பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது இதனால் மலையோர பகுதிகளில் இரவு நேரங்களில் ரப்பர் பால் வடிக்க செல்லும் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து கடையாலுமூடு பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது இதனால் மலையோர மக்களின் நலன்கருதி சேதமடைந்து பயன்பாடற்று கிடக்கும் உயர் கோபுர மின்விளக்குகளை போர்கால அடிப்படையில் சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது."
