Kanyakumari | "வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு.." -மருமகளின் காதை கடித்து துண்டாக்கிய கொடூர மாமியார்

x

வீயனூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் மனைவியான மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். வரதட்சணை கேட்டு மஞ்சுவிடம் அவரது மாமியார் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவனை மஞ்சு தட்டிகேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாமியார் அல்போன்சா, மஞ்சுவை தலையில் கொடூரமாக தாக்கி காதை கடித்து துண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஞ்சுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்