வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலுக்கு சென்று காணாமல் போன 7 மீனவர்களை மீட்டுத் தருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். குமரி மாவட்டம் சைமன் காலனி பகுதியை சேர்ந்த மீனவர் சகாய அருள் பிரின்ஸ், குளச்சல் பகுதியை சேர்ந்த சகாய பீட்டர், சுதர்சன், கிறிஸ்து அடிமை உட்பட 7 மீனவர்களையும் மீட்டு தாயகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தெரிவித்தனர். வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தங்களுக்கு அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.