"அந்த ரிப்போர்ட் வெளியே வந்தால்..." - கனிமொழிக்கு அண்ணாமலை பதில்
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், மத்திய அரசு வெளியிடும் தரவுகள் தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வகையில் இருந்தால் அதனை ஒரு சார்புடையது எனவும், அதுவே பாராட்டும் வகையில் இருந்தால் அதனை நாளிதழ்களின் முதல் பக்கங்களில் அச்சிட்டுக் கொள்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்து, தமிழ்நாடு அரசு ஆணையம் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தாலே திமுக கட்டமைக்க விரும்பும் உண்மைக்கு புறம்பான பிம்பம் தகர்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
