Kamarajar | செம்மறிகுளம் கஸ்பாவில் காமராஜர் சிலை திறப்பு
திருச்செந்தூர் அருகே செம்மறிகுளம் கஸ்பாவில், மக்களே ஒன்றுகூடி நிதி திரட்டி நிறுவப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
செம்மறிகுளம் ஊர் நல கமிட்டி சார்பில், உடன்குடி- நாசரேத் சாலையில், செம்மறிகுளம் ஊரின் மையப்பகுதியில் காமராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், செம்மறிகுளம் கஸ்பா மக்களின் பங்களிப்புடன் சுமார் 7 அடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இச்சிலையை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நூலகம் ஒன்று திறக்கப்பட்டு காமராஜர் புத்தகம் வெளியிடப்பட்டது.
பெண்களுக்கு இலவச சேலைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
Next Story
