"பேனரை எதிர்க்கவில்லை, சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் வைக்கலாம்" - கமல்ஹாசன்

"பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு வாழ்த்து"

சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு இது என கம​ல்ஹாசன் கூறினார். மேலும், நாட்டுக்கு பெருமை சேர்த்த சிந்துவை வரவேற்பது தனது கடமை எனவும் அவரது திறமையை இளையவர்களுக்கு கற்றுத் தரும் வகையில், இலவச பேட்மிண்டன் பயிற்சி மையம் ஒன்றை சென்னையில் தொடங்க வேண்டும் எனவும் கமல் கூறினார். தொடர்ந்து பேசிய கமல், தமிழகத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இடையிலான சந்திப்பு வெற்றியடைய வாழ்த்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com