குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
Published on

குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில், ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இதுகுறித்து எந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழகம் திகழும் நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல என கமல்ஹாசன் குறிப்பிட்டு உள்ளார். எனவே இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com