இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். 'உணவுடன் உறவாடிக் கிடந்த தமிழர்களின் மரபையும், வரலாற்றையும் மீட்டவர் நெல் ஜெயராமன்' என தெரிவித்துள்ள கமல், பாரம்பரிய நெல் வகைகளை அவர் பாதுகாத்தது போல, நாம் ஓவ்வொருவரும் அவரின் சிந்தனைகளை பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.