கமல் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

இந்து தீவிரவாதம் பற்றி பேசிய, கமல் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
கமல் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
Published on

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்பேரில், மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக 153 ஏ, 295 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோல, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். கமல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.

இதற்கிடையே, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா கட்சியின் தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை, நாளை நடைபெறுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com