முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு

முன்ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன், மனு தாக்கல் செய்துள்ளார்.
முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு
Published on

கமல்ஹாசன் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விடுமுறை கால அமர்வில் வழக்கு தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க இயலாது எனவும், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் கூறினார்.

இதனையடுத்து கமல்ஹாசன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மனுவில் உறுதி அளித்துள்ள கமல்ஹாசன், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com