வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்

இன்று முதல் பல தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்
Published on
இன்று முதல் பல தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், வெளியே வரும் போது, நம் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்தாகும் வகையில் அலட்சியம் காட்டக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com