Perambalur | பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் உறங்கியவர்கள் மீது அப்படியே ஏறி இறங்கிய ஜேசிபி
Perambalur | Death | பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் உறங்கியவர்கள் மீது அப்படியே ஏறி இறங்கிய ஜேசிபி
#perambalur #death #thanthitv
பெரம்பலூர் அருகே சோகம்- இருவர் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் பார்க்கிங் பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஜேசிபி வாகனம் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் சோரி (25) மற்றும் டக்கீஸ்வர் (21) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக போர்வெல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். இன்று காலை தம்பிரான்பட்டியைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் சந்தோஷ் ராஜ் வாகனத்தை இயக்க முற்பட்டபோது, அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஏறியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த செஞ்சேரி ஊரகப் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
