Jallikattu | ஜல்லிக்கட்டு - அரசு அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளதாக சாடல்
ஜல்லிக்கட்டு - அரசு அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளதாக சாடல்
ஜல்லிக்கட்டில் ஆன்லைன் முறை தளர்வு - நன்றி தெரிவித்த வர்ணனையாளர் சங்கம். ஜல்லிக்கட்டு போட்டியில் நடைமுறையில் இருந்த முத்திரைத்தாள் விதிமுறையை ரத்து செய்த தமிழக அரசுக்கு, ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறிய ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் சங்கத்தினர் , விளிம்பை நோக்கி செல்லும் ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக, தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் அளித்த பேட்டியில்,ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.
Next Story
