ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் உயிரிழப்பு
மதுரை கீழக்கரை எருதலுவுதல் அரங்க ஜல்லிக்கட்டு போட்டியில் காளை சேகரிக்கும் பகுதியில் மாடு மட்டியதில் காளை உரிமையாளர் உயிரிழப்பு...மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற வரும் நிலையில், மதுரை மாவட்டம் காஞ்சாரம்பேட்டை அருகே மந்திகுளம் பகுதியை சேர்ந்த காளை உரிமையாளர் காத்தாலி (45) காளைகள் சேகரிக்கும் பகுதியில் காளை மார்பு பகுதியில் முட்டியதில் பலத்த காயமடைந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது காளை முட்டியதில் காளை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஜல்லிக்கட்டு போட்டியானது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் காளை உரிமையாளர் மாடுபிடி வீரர் என தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
