நடிகை இறக்கிவிட்ட முரட்டு காளை - அந்தரத்தில் பறந்த மாடுபிடி வீரர்கள்

x

சீறிய காளைகளை சீறிப்பாய்ந்து அடக்கிய வீரர்கள் என பார்வையாளர்களை அதிரச் செய்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அந்த வகையில் துள்ளி குதித்து கதி கலங்க விட்ட காளையை வீரர் அடக்கியது தனி கவனம் பெற்றது...

இதே போல் முதலில் வீரர்களை சிதறடித்து ஆட்டம் காண வைத்த மதுரை குலமங்கலம் வக்கில் திருப்பதி மாடு...பின்னர் பிடிபட்டது...

தாவுடா செவல என்ற லெவலில் வாடிவாசலில் இருந்து தாவியபடி வந்து வீரரை எட்டி உதைத்து வெற்றிபெற்ற கருவனூர் முத்து என்பவரது காளை....களத்தில் கெத்து காட்டியது...

இந்த வரிசையில் நான் கடவுள் நடிகை திருநங்கை கீர்த்தனா தனது காளையை களமிறக்க..வீரர்களை நெருங்க விடாமல் வெற்றி பெற்றது அவரின் காளை...

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் காளை, வீரர்களை சிதறவிட்டு அதிரடி வெற்றி பெற்றது...

இப்படி பரபரப்புடன் நடந்து வந்த ஜல்லிக்கட்டில், மாட்டை பிடித்தால் ஆட்டுக்குட்டி என உரிமையாளர் ஆட்டுக்குட்டியை தோளில் தூக்கி வர, அவரின் காளை வெற்றிப்பெற்று திரும்ப...அதே பாணியில் தனது ஆட்டுக்குட்டியை அவரே எடுத்து சென்றார்...

இதற்கிடையில், வாடிவாசலில் காளைகளை அவிழ்க்கப்படுவது தாமதமானதால், அமைச்சர் மூர்த்தியே வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் இறங்கி காளைகளை அவிழ்க்கும் பணியை விரைவுப்படுத்தியது சுவாரஸ்யத்தை கூட்டியது...

இதென்ன பிரமாதம் என எண்ணும் அளவிற்கு 70 வயதிலும் காளையை களமிறக்க வந்த மூதாட்டி..இவங்க எல்லாம் என் பேரனுங்க என வீரம் பொங்க கூறியது காண்போரை சிலிக்க வைத்தது...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் மைதானத்திற்கு அருகில் எல்.இ.டி திரைகள் பல இடங்களில் அமைக்கப்பட்ட நிலையில்... அதில் ஒளிபரப்பப்படும் தந்தி டிவி ஜல்லிக்கட்டு நேரலையை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்