இதை கேட்டால் நடக்கும்..வைரவ சடையாண்டி சமயன் கோயில் சிறப்பு வழிபாடு - குவிந்த பக்தர்கள்

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வைரவ சடையாண்டி சமயன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து புனித கலச தீர்த்தங்களை கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பைரவ நாங்கூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து புனித தீர்த்த கலசங்களை வைத்து பூஜை செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஊர் கோடாங்கி ஆனந்தம் சாமி ஆடி அருள்வாக்கு கூறினார். திருடு போன பொருட்களை கண்டுபிடித்து தருமாறு வேண்டினால், கிடைக்கும் என்பது இந்த கோவிலின் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்