எஸ்.பி.கே நிறுவனங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

எஸ்.பி.கே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, இன்றும் பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.கே நிறுவனங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் SPK நிறுவனங்கள், அதன் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளங்கோவின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மயிலாப்பூரில் உள்ள மாணிக்கம் என்பவர் வீட்டில் 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 2வது நாள் சோதனையில் மட்டும் 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமானவரி சோதனையில் மொத்தம் இதுவரை 179 கோடி ரூபாய் மற்றும் 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com