நடிகர் சங்கம் பிளவுக்கு யார் காரணம்? - ஐசரி கணேஷ் விளக்கம்

நடிகர் சங்கத்தின் பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோர் தான் காரணம் என ஐசரி கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் சங்கத்தின் பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோர் தான் காரணம் என ஐசரி கணேஷ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரமணா, நந்தா ஆகியோரால் தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறினார். முன்னதாக பேசிய இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சங்க தேர்தலில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com