Dindigul | Professor | ஒரு காலேஜ் ப்ரோபஸர் பண்ற வேலையா இது? - கடைசில வேலைக்கே வேட்டு

x

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி - பேராசிரியை கைது

திண்டுக்கல்லில் அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி, 7 பேரிடம் 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த சியாமளா தேவி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக‌க் கூறி மோசடி செய்த‌தாக, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நவம்பர் மாதம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் சியாமளா தேவி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் 2ஆம் தேதி சியாமளா தேவியின் வீட்டுக்கு சென்று வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சியாமளா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னிவாடி அரசு கல்லூரியில் சியாமளா தேவி வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்