மாட்டு வண்டிக்கு மோட்டார் பதிவு எண்ணா...? | முதியவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டே..
மாட்டு வண்டிக்கு மோட்டார் பதிவு எண்ணா...?
திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதிகளில் ஒற்றை மாட்டு வண்டியில் கடைகளுக்கு மூட்டைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் வடக்கு பாறைப்பட்டியை சேர்ந்த முதியவர் சுப்பிரமணி தனது மாட்டு வண்டியின் பின் பக்கத்தில் மோட்டார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டை மாட்டியபடி வீதிகளில் வலம் வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, தனது மாட்டு வண்டியை சொகுசு காராக நினைத்து கொண்டு சாலையில் கிடந்த நம்பர் பிளேட்டை தன் மாட்டு வண்டியில் பொருத்திக்கொண்டு ஜாலியாக உலா வருவதாகவும், தனக்கு சொகுசு கார் தன் மாட்டுவண்டி தான் எனவும் கூறினார். மேலும் மாட்டு வண்டியில் நம்பர் பிளேட் மாட்டிக்கொண்டு திண்டுக்கல் வலம் வந்த முதியவரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
Next Story
