தென்னந்தோப்பில் போதை நடன நிகழ்ச்சி - போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய ஆண்கள், பெண்கள்

x

ஓசூரில் தென்னந்தோப்பில் நடைபெற்ற சட்டவிரோத நடன நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முதுகுருக்கி கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மது, டிஜே இசை கச்சேரி மற்றும் போதைப்பொருட்களுடன் ஆண்களும் பெண்களும் நடனமாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த பெங்களூரை சேர்ந்த பாலாஜி, பீகாரை சேர்ந்த ரஜினீஸ் குமார் மற்றும் கோவாவை சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் காமிலோ ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து விலை உயர்ந்த போதைப்பொருட்கள், உயர் ரக கர்நாடக மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்