புத்தகப் பைகள், காலணிகள் கொள்முதல் டெண்டர் : இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தக பை மற்றும் காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தகப் பைகள், காலணிகள் கொள்முதல் டெண்டர் : இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
தமிழ்நாடு பாடநூல் கழகத்தை எதிர்த்து டெல்லி - ஹரியானா நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. காலணி டெண்டரை பொறுத்தவரை, நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஒரே மாதிரியான காலணி மாதிரிகளை சமர்ப்பித்துள்ளதால் இந்த டெண்டர்களை நிராகரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி ஆதிகேசவலு, புத்தகப்பை, காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை செப்டம்பர் 5 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com