ராணுவ வீரர்களை அவமதிப்பதா? - செல்லூர் ராஜுக்கு அமைச்சர் கண்டனம்
தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவமதிப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து
சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களை அவமதிக்கும் இதுபோன்ற அவதூறான கருத்துக்களுக்கு அதிமுக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்போதைய சூழ்நிலையில், கரசேவைக்கு சென்றது போல், பாஜகவும் - அதிமுகவும் கம்புதடி எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு போய் போரிடுவது தான் சரியாக இருக்கும் என செல்லூர் ராஜு நினைக்கிறாரா? என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
