இந்தியன் 2 பட விபத்து தொடர்பான வழக்கு - கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் விடுவிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பில் காயமடைந்தவர்களிடம் நேரில் சென்று விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்தியன் 2 பட விபத்து தொடர்பான வழக்கு - கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் விடுவிப்பு
Published on

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வழக்கின், விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். இதில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரியாக, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டு, அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com