சென்னையில் பெண்ணின் போட்டோவை காட்டி 52 பெண்கள் கொடுத்த புகார் -அதிர்ச்சி காரணம்
சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு மோசடி வரிசையில், ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 52 பெண்கள், தாங்கள் இழந்த16 லட்சத்தை மீட்டு தருமாறு புகாரளித்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்பனா,1000 ரூபாய் கட்டினால் 12 மாதத்தில் 12,000 ரூபாய்க்கு கூடுதலாக நான்காயிரம் தருவதாக கூறி, ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். இதை நம்பி பெண்கள் பணத்தை கட்டி வந்துள்ளனர். தற்போது கேட்டால், உங்கள் பணத்தை வேறு நபரிடம் வட்டிக்கு விட்டிருந்தேன், அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கல்பனா கூறியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
