பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தகுதி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2511 பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 3, 4 தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தகுதி பெற்று 2500 பேர் வரை வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட நிலையில், வழக்கு காரணமாக பணிநியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்த நிலையில், உடனடியாக பணி நியமன கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 3, 4 தேதிகளில் சென்னையில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Next Story
