சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகும் படங்கள் - சூரி வேதனை
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது மனவேதனை தருவதாக நடிகர் சூரி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சூரி,, தான் நடித்துள்ள மாமன் படம் குறித்த விமர்சனங்களை மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புது படங்களை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியிடுவது, மற்றொருவர் குழந்தையை கொண்டுவந்து கொல்வதற்கு சமம் எனக் கூறினார்.
Next Story
