கறுப்புத்தாளை ரசாயனத்தில் முக்கினால் பணமாக மாறும்"
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கறுப்பு காகித கட்டுகளை கொடுத்து பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் நூதன மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்புத்தாள்களை ரசாயனத்தில் நனைத்தால் பணமாக மாறும் என கூறி மாதம்மாள் என்ற செவிலியரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் பூசாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கர்நாடகாவில் பதுங்கி இருந்து முக்கிய குற்றவாளியான அஞ்செட்டி கோரிப்பாளையத்தை சேர்ந்த பிரபுவை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபுவிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு தாள்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்
Next Story
