"சரிசமமான கதாபாத்திரமாக இருந்தால் சிவகார்த்திகேயுடன் நடிப்பேன்" - நடிகர் சூரி

x

சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடிப்பேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

திருச்சி காவேரி திரையரங்கத்தில் 'மாமன்' திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடும்ப சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசுவது 'மாமன்' படத்தின் வெற்றியாகும்” என குறிப்பிட்டார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஒரு காமெடி படத்தில் இணைந்து நடிக்கச் சொன்னால், அவரே தன்னை அழைத்துக் கொள்ள மாட்டார் என்றும், அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்போம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்