``திருப்பூரில் தேங்காய் பன்னுக்காக அலைந்தேன்'' - கண்கலங்கிய நடிகர் சூரி

x

திருப்பூரில் தேங்காய் பன்னுக்காக அலைந்து திரிந்ததாக கண்கலங்கி பேசிய நடிகர் சூரி அதே ஊரில் தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது போல் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட முன்னோட்ட விழாவில் அவர் கலந்துக்கொண்டார்.அப்போது தான் வேலை பார்த்த நிறுவன உரிமையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். பின்னர் பேசிய அவர் 1997ஆம் ஆண்டு முதல், தான் கடுமையாக உழைத்தே மேலே வந்ததாகவும், தரைக்கு மேல் இருந்து வளரவில்லை என்றும் தரைக்கு கீழே இருந்து வளர்ந்து வந்ததாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்