"எனக்கு தான் சொந்தம்" கோயில் சொத்தை தன் சொத்தாகிய நபர்

x

திண்டுக்கலில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், தனியாக உண்டியல் வைத்து ஒருவர் பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அருகே தங்கச்சி அம்மாபட்டியில் ஸ்ரீ தேவி காளியம்மன் கோவிலில், பரம்பரை அறங்காவலர் என்று கூறும் பாலுமகேந்திரன் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து உண்டியலில் வசூலான பணம் உள்பட 96 சவரன் தங்க நகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், காணிக்கை மற்றும் எருமை கிடா விற்ற பணம் 25 லட்சம் உள்ளிட்டவற்றை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்