ஐதராபாத் என்கவுன்ட்டர் : " நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதே சரி" - கனிமொழி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார்.
ஐதராபாத் என்கவுன்ட்டர் : " நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதே சரி" - கனிமொழி
Published on

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார். அதேசமயம், நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, தண்டனை கிடைத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும் என தெரிவித்தார். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை தரும் என்பதற்காக, என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா? என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com