சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்

x

அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில்

தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து புது வண்ணாரப்பேட்டை பகுதி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் எதிரில் ஆப்பாட்டம் நடத்தியபின் கண்டன உரையாற்றிய ஆர்.எஸ்.ராஜேஷ், தூய்மை பணியாளர்களின் வேலையை தனியார்மயமாக்கினால் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்றும், இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக தலைமை கழக நிர்வாகி மருத்துவர் கோவை சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு மற்றும் மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து வந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிமுகவினர் நடத்திய இந்தப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் வந்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்