கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சந்தையில் கேன் வாட்டர் விநியோகம் சூடுபிடித்துள்ளது.
இந்த சோதனையில் 700 க்கும் மேற்பட்ட அனுமதி இல்லாத தரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே சந்தையில் விற்கப்படும் கேன் குடிநீரின் தரத்தை, நுகர்வோர் ஆராய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தரமற்ற கேன் குடிநீர் விற்பனையால், அனைத்து விதமான நோய்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர், மருத்துவர்கள். எந்த நிறுவனத்தின் தண்ணீராக இருந்தாலும் அதனை முறையாக பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கை...பொதுமக்கள் தங்கள் உடல் நலனை பாதுகாக்க தாங்கள் பருகும் கேன் குடிநீரின், தரத்தை, சுய பரிசோதனை செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
