ஹோட்டல் மேற்கூரை விழுந்து விபத்து | வெளியான பதைபதைக்கும் CCTV வீடியோ
மேற்கூரை விழுந்த விபத்தில் உயிர் தப்பிய வாடிக்கையாளர்
மேட்டூர் அருகே பலத்த காற்று காரணமாக உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், வாடிக்கையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளத்தூர், ராமன் நகர் ,மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ராமன் நகர் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் உணவகத்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் கடை முன் நின்றிருந்த வாடிக்கையாளர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
