வீட்டில் எரிந்த நிலையில் 2 முதியவர்களின் உடல் மீட்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் 2 முதியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லூர்துசாமி, அவரது மனைவி இருவரும் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் கொன்று விட்டு தீ விபத்தை ஏற்படுத்தி சென்றதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்