Hosur | Accident | சிறுமி காலில் ஏறிய பேருந்து.. நடுரோட்டில் கதறிய தாய்..
ஓசூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பீகாரைச் சேர்ந்த 11 வயது சிறுமி படுகாயமடைந்தார். பீகாரைச் சேர்ந்த நஸ்ரானா, தனது மூன்று மகள்களுடன் தளியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, ஓட்டுநர் பேருந்தைத் திருப்பியபோது, எதிர்பாராதவிதமாக கத்தீஜா பாத்திமா என்ற சிறுமியின் கால் மீது பேருந்து சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியைக் கண்டு தாய் மற்றும் சகோதரிகள் கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது.
Next Story
