தூக்கம் வடிவில் வந்த எமன்... ஒரு நொடியில் வாழ்க்கையே முடிந்த சோகம்
ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு ஓட்டுனர் ராஜேஷ்குமார் மற்றும் அருள் ஆகியோர் டேங்கர் லாரியில் வந்துள்ளனர். ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடியது...
Next Story
