சேலம் அருகே கொடூரம் - மாற்றுத்திறனாளி மீது லாரி ஏறிய அதிர்ச்சி காட்சி
சேலம் அருகே கொடூரம் - மாற்றுத்திறனாளி மீது லாரி ஏறிய அதிர்ச்சி காட்சி
சேலம் அருகே நள்ளிரவில் கொட்டும் மழையில் சாலையைக் கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மீது, லாரி ஏறிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
காக்காபாளையம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
